Home நாடு கைதிகள் புனர்வாழ்வுத் திட்டம் – வேதமூர்த்தி தொடக்கி வைத்தார்

கைதிகள் புனர்வாழ்வுத் திட்டம் – வேதமூர்த்தி தொடக்கி வைத்தார்

1425
0
SHARE
Ad

காஜாங் – நாடு முழுவதும் உள்ள சிறைச் சாலைகளில் இருக்கும் சுமார் ஏழாயிரம் கைதிகளையும் அவர்களின் குடும்பத்தாரையும் உள்ளடக்கிய மறுவாழ்வுத் திட்டத்திற்கு அடித்தளம் இடப்பட்டிருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மலேசிய இந்திய சமுதாயத்தைப் பீடித்துள்ள எத்தனையோ சிக்கல்களில் இளைஞர்களிடையே நிலவும் வன்முறைக் கலாச்சாரமும் ஒன்றாக இருப்பதால் இதைக் களைவதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளதாக இதன் தொடர்பான அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட கைதிகளின் குடும்ப சூழல், பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல முடியாததற்கான காரணம், சிறு தொழில் மூலம் வருமானம் பெறுதல் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய இந்தப் புனர்வாழ்வுத்திட்டம் காஜாங் சிறையில் அறிமுகம் கண்டாலும் நாடு முழுவதும் உள்ள இந்தியக் கைதிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதின் தொடர்பில் மலேசியத் திருத்தம் அறக்கட்டளையும் மித்ராவும் இணைந்து செயலாற்றும் என்று பிரதமர் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி கடந்த வியாழக்கிழமை (ஜூலை 18) காஜாங் சிறையில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தொடர்பில் மேலும் கருத்துரைத்தார்.

#TamilSchoolmychoice