Home நாடு வேறுபாடுகள் தீர்க்கப்படாவிடில் பக்காத்தான் அரசு கவிழ்ந்துவிடும்!

வேறுபாடுகள் தீர்க்கப்படாவிடில் பக்காத்தான் அரசு கவிழ்ந்துவிடும்!

940
0
SHARE
Ad

போர்ட் டிக்சன்: நேற்றிரவு வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிகேஆர் கட்சித் தலைவர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும், பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டும் கட்சியில் ஏற்பட்டுள்ள உரசல்களை முடிவுக்கு கொண்டுவரும்படி கேட்டுக் கொண்டனர்.

இருப்பினும், நிகழ்ச்சியில் அன்வாருடன் முரண்பாட்டில் இருக்கும் பிகேஆரின் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி இல்லாதது பல கேள்விகளை எழுப்பியது.

எவ்வாறாயினும், அஸ்மின் இன்று சனிக்கிழமை நடைபெற உள்ள கூட்டத்தில் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

மிக முக்கியமான விசயத்திற்காக இந்த பிரச்சனைகளை கைவிட வேண்டும் என்று அன்வார் கேட்டுக் கொண்டார். 14-வது பொதுத் தேர்தலுக்கு முன்னர், பக்காத்தான் ஹாராப்பானில் உள்ள அனைத்து கட்சிகளும் அவர்களிடத்தில் உள்ள வித்தியாசத்தையும், வெறுப்பையும் தகர்த்து முன்னோக்கி நகர்ந்ததை மகாதீர் பிகேஆருக்கு நினைவுப்படுத்தினார்.

அன்வாருக்கும் அஸ்மினுக்கும் இடையிலான மோதல் இந்த வாரம் உச்சத்தை அடைந்தது. ஓரினச் சேர்க்கை காணொளியில் இருப்பது அஸ்மின் என உறுதிப்படுத்தப்பட்டால், அஸ்மின் உடனடியாக பொருளாதார விவகார அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அன்வார் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அதற்கு பதிலளித்த அஸ்மின், அன்வார் முதலில் அவரை பரிசோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சாடினார்.

இதற்கிடையில், சந்தர்ப்பவாதிகள் மற்றும் நாசவேலை செய்ய முயற்சிகள் எடுத்துக் கொண்டிருப்போரை மகாதீர் எச்சரித்தார். இது கையாளப்படாவிட்டால் பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.