Home நாடு ஜோஹானாவுடன் நடந்த கைபேசி உரையாடல்களை ஜோ லோ அழிக்கக் கோரினார்!

ஜோஹானாவுடன் நடந்த கைபேசி உரையாடல்களை ஜோ லோ அழிக்கக் கோரினார்!

579
0
SHARE
Ad
படம்: நன்றி டி எட்ஜ் மார்கெட்

கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்ட நஜிப் தொடர்பான எஸ்ஆர்சி இண்டர்னேஷனல் ஊழல் வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது. 

நஜிப் தரப்பு வழக்கறிஞர் ஹர்விந்தர்ஜித் சிங் பிளாக்பெர்ரி கைபேசி மூலம், ஜோ லோவுக்கும் முன்னாள் அம்பேங்க் தொடர்பு பிரிவு மேலாளர் ஜோஹானா யூ ஜிங் பிங்குக்கும் நடந்த உரையாடல்களை ஆராய்ந்ததன் மூலம் விசாரணை தொடங்கியது.

அந்த உரையாடல்களில் ஜோ லோ, ஜோஹானாவுடன் நடந்த அந்த உரையாடல்களை அழிக்கும்படியாக கேட்டுக் கொண்டதைப் பற்றி வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

இது கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி காலையில் நடந்ததாக ஹர்விந்தர்ஜித் தெரிவித்தார்.

இந்த உரையாடலை ஜோஹானா உறுதிப்படுத்திய நிலையில், ஜோ லோவின் அந்த அறிவுறுத்தலுக்கு தாம் இணங்கவில்லை என்று கூறுகிறார்.

2015-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதிக்குப் பிறகு அந்த உரையாடல்களை ஜோஹானா அழித்து விட்டார் என்ற கூற்றுக்கு ஜோஹானா மறுப்பு தெரிவித்தார். அந்த உரையாடல்கள் அவரது பிளாக்பெர்ரியில் இருந்திருக்க வேண்டும் என்று கூறிய ஜோஹானா, அது அதே ஆண்டின் பிற்பகுதியில் தேசிய வங்கியால் பறிமுதல் செய்யப்பட்டது என்று கூறினார்.