Home கலை உலகம் “ஜெய் ஶ்ரீராம்” பெயரால் கொலைகள் நடப்பதை மோடி தடுக்க வேண்டும்!- இந்திய திரைப்பட இயக்குனர்கள்

“ஜெய் ஶ்ரீராம்” பெயரால் கொலைகள் நடப்பதை மோடி தடுக்க வேண்டும்!- இந்திய திரைப்பட இயக்குனர்கள்

958
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் நடந்து வரும் தொடர் இனம், மத ரீதியிலான கும்பல் கொலைகள் போன்ற சம்பவங்களினால் அந்நாட்டில் வாழ்வதற்கான தகுதியை குறைத்து வருவதாக இந்தியத் திரைப்பட இயக்குனர்களான மணிரத்னம், அனுராக் காஷ்யப் மற்றும் அடூர் கோபால கிருஷ்ணன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும், நடிகை கொங்கனா சென் ஷர்மா, வரலாற்றாசிரியர் ராம சந்திர குஹா, நடிகை ரேவதி உள்ளிட்டோரும் இணைந்து இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர்

இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

நமது நாட்டில் சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள மிக மோசமான சம்பவங்கள் குறித்து நாங்கள் கவலை அடைகிறோம். இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு. இங்கு மதம், இனம், பாலினம், சாதி எல்லாவற்றையும் கடந்து அனைத்து குடிமக்களும் சமம் என்கிறது இந்நாட்டு அரசியலமைப்பு. முஸ்லிம், தலித் மற்றும் பிற சிறுபான்மையினர்கள் கூட்டாக தாக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். நீங்கள் நாடாளுமன்றத்தில் இம்மாதிரியான கொலைகளுக்கு கண்டனம் தெரிவித்தீர்கள், ஆனால், இதை செய்தவர்கள் மீது நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?” என்று அவர்கள் கூட்டாக கேள்வி எழுப்பி உள்ளார்கள்.  

இந்தியாவில் சமீபத்தில் “ஜெய் ஸ்ரீராம்என்ற முழக்கங்கள் தற்போது சண்டையின் தொடக்கமாகிவிட்டது. அதன் பெயரால் சட்டம் ஒழுங்கு மற்றும் பிற கும்பல் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.