அண்மையில் பேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி சேகரித்து வைத்துள்ளது குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்து அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து, பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அந்நிறுவனம் மீது விதிக்கப்பட்டிருந்த 5 பில்லியன் டாலர்கள் அபராதத்துக்கு மத்திய விசாரணை குழு ஒப்புதல் வழங்கியது.
சுமார் 87 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை, அரசியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டை அந்நாட்டின் மத்திய வணிக ஆணையம் விசாரித்து வந்தது.
இது குறித்து பேஸ்புக் மற்றும் மத்திய வணிக ஆணையம் எவ்வித கருத்தும் தெரிவிக்காத நிலையில், தற்போது அபராதத்தை செலுத்துவதுடன் ஒரு சில பாதுகாப்பு அம்சங்களையும் ஆராயும் என்று குறிப்பிட்டுள்ளது.