Home நாடு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நீதிமன்றத்தை காலி செய்ய அதிகாரிகள் உத்தரவு!

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நீதிமன்றத்தை காலி செய்ய அதிகாரிகள் உத்தரவு!

901
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல் இருப்பதாக நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலிக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை திடீரென நிறுத்தப்பட்டதாக மலேசியாகினி செய்தித்தலம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகாரிகள் நீதிமன்ற வளாகத்தை ஆய்வு செய்து அந்த பகுதியை ஆபத்திலிருந்து மீட்கப்பட்டது என்று அறிவிக்கும் வரையில் விசாரணையை ஒத்திவைக்குமாறு அவர் உத்தரவிட்டார்.

நீதிமன்றத்திற்குள் உள்ள அனைவரும் உடனடியாக அறையை விட்டு வெளியேறி காவல் துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.