Home நாடு ஜசெகவுடன் உறவில் உள்ள கட்சிகளுக்கு அம்னோ, பாஸ் உடன் இணைய வாய்ப்பில்லை!

ஜசெகவுடன் உறவில் உள்ள கட்சிகளுக்கு அம்னோ, பாஸ் உடன் இணைய வாய்ப்பில்லை!

763
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இரு கட்சிகளுக்கிடையேயான ஒத்துழைப்பை விரைவில் அதிகாரப்பூர்வமாக உருவாக்கும் முயற்சியில் அம்னோவும் பாஸ் கட்சியின் சேர்ந்து அது சார்ந்த சாசனத்தில் கையெழுத்திட உள்ளன.

அதன் பிறகு, ஜசெகவுடன் உறவு கொண்ட எந்தவொரு கட்சிக்கும் அவர்களுடன் இணைவதை ஏற்றுக் கொள்ளப்படாது என்று அம்னோ கட்சித் தலைவர் டாக்டர் சாஹிட் அகமட் ஹமீடி குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அம்னோ ஜசெகவுடனான ஒத்துழைப்பை நிராகரிக்கிறது. எனவே, எந்தவொரு கட்சி ஜசெகவுடன் இணைந்து செயல்படுகிறதோ அதனுடன் எங்களுக்கு பேச்சுவார்த்தை இருக்காதுஎன்று அவர் கூறினார்.

இருப்பினும், முன்னாள் துணைப் பிரதமரான அவர் இவ்விவகாரம் குறித்து ஏன் எழுப்பினார் என்று தெளிவுப்படவில்லை. இம்மாத தொடக்கத்தில், எதிர்க்கட்சியில் உள்ள மலாய் அரசியல் கட்சிகளை பெர்சாத்துவுடன் இணையக் கோரி பக்காத்தான் ஹாராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அழைப்பு விடுத்திருந்தார்.

ஏன் அவ்வாறு அம்னோ முடிவெடுத்துள்ளது என்று வினவிய போது, அம்னோவும் தேசிய முன்னணியும் ஒன்றாக சேர்ந்து எதிர்க்கும், ‘மலேசியன்மலேசியா’ திட்டத்தை, ஜசெக நாட்டினில் அமல்படுத்த முற்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.