Home உலகம் “பாகிஸ்தானில் 30,000-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உள்ளனர்”- இம்ரான் கான்

“பாகிஸ்தானில் 30,000-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உள்ளனர்”- இம்ரான் கான்

855
0
SHARE
Ad

வாஷிங்டன்: பாகிஸ்தானில் பயிற்சிப் பெற்ற தீவிரவாதிகள் 30,000-க்கும் மேற்பட்டோர் உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இவர்கள் ஆப்கானிஸ்தான் அல்லது காஷ்மீர் பகுதிகளில் பயிற்சி பெற்றவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், அந்நாட்டுப் பிரதமரே இப்படி சொல்லியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இம்ரான் கான், “என் தலைமையிலான ஆட்சி பாகிஸ்தானில் பதவியேற்கும் வரை எந்த கட்சிக்கும், ஆட்சிக்கும் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை. இன்னும் எங்கள் நாட்டில் 30,000 முதல் 40,000 தீவிரவாதிகள் இருக்கின்றனர். அவர்கள் ஆப்கானிஸ்தான் அல்லது காஷ்மீரில் பயிற்சி எடுத்திருக்கலாம்எங்கள் கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்ததை அடுத்துதான், பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மற்றும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன.” என்று அவர் கூறியுள்ளார்.