Home One Line P1 கோயில்கள் அமைப்பதற்கு மித்ராவின் நிதி பயன்படுத்தலாமா?

கோயில்கள் அமைப்பதற்கு மித்ராவின் நிதி பயன்படுத்தலாமா?

828
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புத்ராஜெயாவில் இந்து கோயில் கட்டுவதற்கு, ஐந்து மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்த முடிவை நியாயப்படுத்துமாறு பார்டி நெகாரா உதவித் தலைவர் எஸ். கோபி கிருஷ்ணன் மித்ராவை வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற நோக்கங்களுக்கான நிதி, பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தியின் கீழ் இருக்கும் மித்ராவிடமிருந்து வந்திருக்கக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

ஒரு கோயில் கட்டுவதற்கு ஐந்து மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்வது என்பது இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை எந்த வகையில் மேம்படுத்துகிறது? கோயில் ஒதுக்கீடு மித்ராவின் கொள்கையின் ஒரு பகுதியா? அப்படியானால், மற்ற கோயில்கள் ஏன் அதைப் பெறவில்லைஎன்று கோபி மலேசியாகினியைத் தொடர்பு கொண்ட போது கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

அடுத்த ஆண்டு ஒதுக்கீட்டின் கீழ் அதே கோயிலுக்கு மற்றொரு 5 மில்லியனை வழங்குவதாக மித்ரா உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

வழிபாட்டுத் தலங்களுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்குவதை நான் எதிர்க்கவில்லை. இருப்பினும், இம்மாதிரியான விவகாரங்களுக்கு சிறப்பு அல்லது கூடுதல் நிதிகளிலிருந்து வர வேண்டும். மித்ராவிலிருந்து அல்ல,” என்று அவர் மேலும் கூறினார்.

தேசிய முன்னணி நிருவாகத்தின் போது இதே தவறுதான் நடந்துக் கொண்டிருந்தது. தற்போது, மித்ராவும் அதனைச் செய்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.