Home One Line P1 இஸ்லாம் மதத்திற்கு சிறார்கள் மாறுவது குறித்த விவகாரத்தினால் சிலாங்கூரில் குழப்பம்!

இஸ்லாம் மதத்திற்கு சிறார்கள் மாறுவது குறித்த விவகாரத்தினால் சிலாங்கூரில் குழப்பம்!

749
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிலாங்கூர் மாநில நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களை சந்திக்க, மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி இன்று வியாழக்கிழமை திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இஸ்லாமிய மதத்திற்கு ஒருதலைப்பட்சமாக மாறுவதற்கு வழி வகுக்க முன்மொழியப்பட்ட மாநில சட்ட திருத்தங்கள் காரணமாக சிலாங்கூர் மாநிலம் தற்போது குழப்ப நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  ​​

சிலாங்கூர் மாநில பெர்சாத்து கட்சி பொதுச் செயலாளர் ஹாஸ்னிசாம் அடாம் மலேசியாகினியிடம் கூறுகையில், இந்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை ஷா அலாமில் உள்ள மந்திரி பெசாரின் இல்லத்தில் நடைபெறும் என்று கூறினார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், சிலாங்கூர் மாநில பிகேஆர் கட்சித் துணைத் தலைவர், ஹீ லோய் சியென் கூறுகையில், இந்த சந்திப்பு ஒரு வழக்கமான கூட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறார்களுக்கு மத மாற்றம் குறித்த வார்த்தையை மாற்றுவதற்காக மாநில சட்டத்தை திருத்த மாநில மந்திரி பெசார் முயற்சிப்பதாக மலேசியாகினி முன்பு தெரிவித்திருந்தது.

தற்போது, ​​18 வயது மற்றும் அதற்கு கீழ் பட்டவர்கள் இஸ்லாத்திற்கு மாறுவதற்கு முன்பு பெற்றோரின் அனுமதியைப் பெற வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

இந்த சர்ச்சைக்குப் பிறகு சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருக்கு எதிரான கருத்துகள் வெளிவரத் தொடங்கியுள்ளது. மேலும், நம்பிக்கைக் கூட்டணி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இது முற்றிலுமாக தகர்க்கக் கூடிய செயல்பாடாக அமைகிறது என்று கருதப்படுகிறது.