கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வழக்கு அடுத்த திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
1எம்டிபிக்குச் சொந்தமான 2.3 பில்லியன் ரிங்கிட் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பில் நஜிப் 25 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார். நீதிபதி கோலின் செகுயிரா முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற இருந்த நிலையில், எஸ்ஆர்சி நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கும் இன்னொரு புறம் தொடர்ந்து கொண்டிருப்பதால், நஜிப்பின் வழக்கறிஞர்கள் குழு, இன்றைய வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கை விடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
பல காரணங்களால் இன்று திங்கட்கிழமை விசாரணை தொடங்க முடியாது என்று இரு தரப்பு வழக்கறிஞர்களிடம் விசாரித்த பின்னர் மற்றும் நீதிபதி கோலின் செகுயிரா இந்த முடிவை எடுத்தார்.
இந்நிலையில், 1எம்டிபி வழக்கு விசாரணை அடுத்த வாரம் திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.