Home One Line P1 சிதம்பரம் கைது செய்யப்படுவாரா? முன் ஜாமீனை இரத்து செய்தது டில்லி உயர்நீதிமன்றம்

சிதம்பரம் கைது செய்யப்படுவாரா? முன் ஜாமீனை இரத்து செய்தது டில்லி உயர்நீதிமன்றம்

780
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் இரவு 11.00 மணி நிலவரம்) முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது நிலுவையில் இருக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல், மேக்சிஸ் வழக்குகளில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த முன் ஜாமீனை டில்லி உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டில்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீனுக்கு மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து சிதம்பரம் வீட்டில் சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் குவிந்தனர். இதன் காரணமாக, அவர் கைது செய்யப்படலாம் என்ற ஆரூடங்கள் எழுந்தன.

எனினும், டில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மேல் முறையீடு செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதன் காரணமாக, உச்ச நீதிமன்றம் சிதம்பரத்தின் மேல்முறையீட்டை விசாரிக்கும்வரை அவரைக் கைது செய்யும் படலம் ஒத்தி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் கூடும்போது, சிதம்பரத்தின் மேல்முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்கும்படி அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஆகக் கடைசியான தகவல்களின்படி, சிபிஐ அதிகாரிகளால் சிதம்பரத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரது கைத்தொலைபேசி தொடர்பு கிடைக்கவில்லை என்றும் அவர் தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்றும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்ததாக இந்தியா டுடே தொலைக்காட்சி தெரிவித்தது.