Home One Line P1 யூபிஎஸ்ஆர்: மாணவர்கள் அழுத்தம் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்!- மஸ்லீ மாலிக்

யூபிஎஸ்ஆர்: மாணவர்கள் அழுத்தம் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்!- மஸ்லீ மாலிக்

680
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை தொடங்கி யுபிஎஸ்ஆர் தேர்வை எழுத இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தமது வாழ்த்துகளை கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார். மேலும் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது அவர்களுக்கு அழுத்தம் ஏற்படக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

நாடு முழுவதும் 8,076 தேர்வு மையங்களில் இந்த ஆண்டு யுபிஎஸ்ஆருக்கு மொத்தம் 445,641 பேர் விண்ணப்பித்தனர்.

இங்குள்ள பிரிசிந்த் 8 (1) புத்ராஜெயா ஆரம்பப்பள்ளியில் பார்வையிட்ட அமைச்சர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

#TamilSchoolmychoice

குழந்தைகளை விட பெற்றோர்கள் அதிக ஆர்வத்தோடும் மனச்சோர்வோடும் இருப்பதை நான் காண்கிறேன், எனவே தங்கள் குழந்தைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று நான் அவர்களுக்கு அறிவுறுத்துகிறேன். மன அழுத்தம் ஆரோக்கியமானது அல்ல. மாணவர்கள் முயற்சி செய்கிறார்கள், இது வாழ்க்கையாக கருதப்படுகிறது,” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இவ்வருட யுபிஎஸ்ஆர் தேர்வு செப்டம்பர் 4, 5, 10, 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் நடைப்பெறுகிறது.

குழந்தைகள் இந்த சோதனையை நல்ல முறையில் எழுத முடியும் என்று நான் நம்புகிறேன், ” என்று அவர் கூறினார்.