Home One Line P1 அஸ்மின் அலியை விலக்க, சிலாங்கூர் சுல்தானிடம் கோரிக்கை மனு

அஸ்மின் அலியை விலக்க, சிலாங்கூர் சுல்தானிடம் கோரிக்கை மனு

1115
0
SHARE
Ad

ஷா ஆலாம் – அஸ்மின் அலி மீதான சர்ச்சைக்குரிய ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்ந்து நாட்டின் முக்கிய விவாத விவகாரமாக உருமாறியுள்ளது. சிலாங்கூரைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு ஒன்றின் (Pertubuhan Bangkit dan Gerak Padu Selangor) தலைவரான ஷாரின் அஸ்லான், அமைச்சர் அஸ்மின் அலி அவரது பதவிகளில் இருந்து விலக்கப்பட வேண்டும் என சிலாங்கூர் சுல்தான் அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.

அந்த கோரிக்கை மனுவோடு சம்பந்தப்பட்ட ஆபாசக் காணொளி மீதான ஆய்வறிக்கை ஒன்றையும் ஷாரின் அஸ்லான் சிலாங்கூர் சுல்தானிடம் சமர்ப்பித்துள்ளார்.

அஸ்மின் அலியின் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகள் சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்துள்ளதால் தங்களின் கோரிக்கையை சுல்தானிடம் சமர்ப்பித்ததாகவும் ஷாரின் அஸ்லான் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அஸ்மின் அலி மீதான காணொளியின் ஆய்வறிக்கை பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டும் பிரதமர் துன் மகாதீர் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்காதது குறித்து சிலாங்கூர் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்றும் ஷாரின் அஸ்லான் தனது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஷாரின் அஸ்லான் தங்களின் மனுவை சிலாங்கூர் சுல்தானின் தனிச் செயலாளர் முனிர் பானிரிடம் ஷா ஆலாமில் உள்ள புக்கிட் கயாங்கான் அரண்மனையில் சமர்ப்பித்தார்.

ஷாரின் அஸ்லான் சமர்ப்பித்த காணொளி மீதான ஆய்வறிக்கை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் சமர்ப்பித்த அதே வெர்டான் போரென்சிக் நிறுவனத்தின் ஆய்வறிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.