Home One Line P1 அஸ்மின் அலி காணொளி – நிபுணர்களின் அறிக்கையை லோக்மான் காவல் துறையில் வழங்கினார்

அஸ்மின் அலி காணொளி – நிபுணர்களின் அறிக்கையை லோக்மான் காவல் துறையில் வழங்கினார்

1227
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய ஓரினச் சேர்க்கை காணொளி மீதான நிபுணத்துவ அறிக்கை ஒன்றை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் (படம்) காவல் துறையிடம் வழங்கியுள்ளார்.

பிரிட்டன், பெர்மிங்ஹாமில் உள்ள வெர்டன் போரென்சிக்  (Verden Forensics) என்ற ஒலி, ஒளி நாடா வகைகளை ஆராயும் நிபுணத்துவ நிறுவனம் அஸ்மின் அலி மீதான காணொளியையும் ஆய்வு செய்து அறிக்கையை வழங்கியுள்ளது.

இதனை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹூசிர் முகமட் உறுதிப்படுத்தினார். சர்ச்சைக்குரிய அஸ்மின் அலி காணொளி வாட்ஸ்எப் போன்ற சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட விவகாரம் இன்னும் விசாரணையில் இருந்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

வெர்டன் போரென்சிக் நிறுவனம் வழங்கிய அறிக்கை மலேசிய சைபர்செக்கியுரிட்டி அமைப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் இதன் தொடர்பிலான விசாரணை அறிக்கைகள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஹூசிர் கூறினார்.

லோக்மான் நாளை செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 3-ஆம் தேதி வாக்குமூலம் வழங்க மீண்டும் காவல் துறையினரால் அழைக்கப்படவுள்ளார் என்ற தகவலையும் ஹூசிர் வெளியிட்டார்.

கடந்த ஜூலை மாதத்தில் இது குறித்துப் பேசிய காவல் துறைத் தலைவர் அப்துல் ஹமிட் பாடோர் சைபர்செக்கியுரிட்டி மலேசியா, சர்ச்சைக்குரிய காணொளி உண்மையானது என்பதை உறுதி செய்ததாகவும் ஆனால், அதில் காணப்படும் நபர் அஸ்மின் அலிதான் என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

எனினும், பின்னர் இதனை மறுத்த லோக்மான் தான் நியமித்த ஆய்வாளர்கள் காணொளியில் இருப்பது அஸ்மின் அலி மற்றும் சந்துபோங் பிகேஆர் இளைஞர் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ் என உறுதி செய்தனர் எனத் தெரிவித்தார்.