Home One Line P2 ஹாலிவுட் நடிகர் கெவின் ஹார்ட் கார் விபத்தில் கடுமையாக காயமுற்றார்

ஹாலிவுட் நடிகர் கெவின் ஹார்ட் கார் விபத்தில் கடுமையாக காயமுற்றார்

1049
0
SHARE
Ad

ஹாலிவுட் – பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் கெவின் ஹார்ட் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் நிகழ்ந்த கார்விபத்தில் சிக்கிக் கடுமையாகக் காயமுற்றார்.

தற்போது மருத்துவமனையில் இருக்கும் கெவின் ஹார்ட்டுக்கும் அவரது காரை ஓட்டிய ஓட்டுநருக்கும் முதுகுப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

கலிபோர்னியா மாநிலத்தின் கலபசாஸ் என்ற இடத்தில் இந்த கார் விபத்து நிகழ்ந்தது.

#TamilSchoolmychoice

கெவின் ஹார்ட்டின் 1970-ஆம் ஆண்டு இரகக் (மாடல்) காரை அவரது ஓட்டுநர் ஓட்டிவந்தார் என்பதும் அந்த ஓட்டுநர் அப்போது குடிபோதையில் இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.