Home One Line P1 லோக்மான் அடாம் காவல் துறை பிணையில் விடுவிப்பு

லோக்மான் அடாம் காவல் துறை பிணையில் விடுவிப்பு

560
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசத் துரோக அறிக்கை வெளியிட்டதாகக் கூறி கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ லோக்மான் நூர் அடாம் காவல் துறை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

லோக்மான் நேற்று விடுவிக்கப்பட்டதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை துணை இயக்குநர் மியோர் பாரிடலாத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.

“மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்படவுள்ள வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை காவல் துறை பூர்த்தி செய்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு எதிராக தேசத்துரோக அறிக்கையை ஒரு முகநூல் நேரடி காணொலி இடுகையின் மூலம் வெளியிட்டதற்காக புத்ரா உலக வணிக மையத்திற்கு அருகிலுள்ள உணவகத்தில் காவல் துறையினரால் லோக்மான் கைது செய்யப்பட்டார்.