Home One Line P1 ஓரினச் சேர்க்கை காணொளி: 55 பக்க ஆய்வறிக்கையை லொக்மான் காவல் துறையிடம் ஒப்படைத்தார்!

ஓரினச் சேர்க்கை காணொளி: 55 பக்க ஆய்வறிக்கையை லொக்மான் காவல் துறையிடம் ஒப்படைத்தார்!

757
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ உச்சமட்டக் குழு உறுப்பினர் லொக்மான் நூர் அடாம் இன்று செவ்வாய்க்கிழமை புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் அமைச்சர் ஒருவரை சம்பந்தப்படுத்திய ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரமாக வாக்குமூலம் அளிக்க முன்வந்தார்.

அவர் காலை 11.30 மணியளவில் காவல் துறை தலைமையகத்திற்குள் நுழைந்தார் என்று பெர்னாமா குறிப்பிட்டிருந்தது.

செய்தியாளர்களிடம் பேசிய லொக்மான், காணொளி பகுப்பாய்வுத் தொடர்பான அசல் 55 பக்க அறிக்கையை பிரிட்டனைத் தளமாகக் கொண்ட வெர்டன் தடயவியல் மேற்கொண்டது எனவும், அது தொடர்பான ஆய்வறிக்கையை காவல் துறையினரிடம் சமர்ப்பிப்பதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

நான் முன்பு வாட்சாப் மூலம் அறிக்கையை காவல் துறையினரிடம் சமர்ப்பித்தேன்,” என்று அவர் கூறினார்.