சென்னை: அண்மையில் தமது அதிகாரத்துவ பயணத்தைத் தொடங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். பிரிட்டனுக்கான தனது பயணத்தை மேற்கொண்ட பிறகு முதலமைச்சர் அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார்.
பல்வேறு துறைசார்ந்த ஆய்வுப் பயணமாக இப்பயணம் அமையும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே, சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவிற்கு தேவைப்படும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள, அமெரிக்காவில் உள்ள பஃபல்லோ கால்நடை பண்ணைக்கு வருகைப்புரிந்ததாக தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பும் வழியில் மீண்டும் வருகிற செப்டம்பர் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் துபாயில் நடைபெறும் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்குக் கொள்ள உள்ளார்.