Home One Line P1 யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு செல்லியலின் நல்வாழ்த்துகள்

யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு செல்லியலின் நல்வாழ்த்துகள்

1077
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாளை புதன்கிழமை செப்டம்பர் 4-ஆம் தேதி தொடங்கும் யுபிஎஸ்ஆர் தேர்வுகளை எழுதவிருக்கும் அனைத்து இந்திய மாணவர்களும் சிறப்பாகத் தேர்வெழுதி சிறந்த தேர்ச்சிகளைப் பெற செல்லியல் குழுமத்தின் சார்பாக எங்களின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அண்மையக் காலங்களில் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் திறன்களையும், சிறந்த அடைவு நிலைகளையும் எடுத்துக் காட்டும் நிலைக் கண்ணாடியாக தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள் அமைந்து வருகின்றன.

அந்த வகையில் யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் தமிழ்ப் பள்ளி மாணவர்களும் சிறந்த முறையில் தேர்ச்சிகளை அடைந்து, தமிழ்ப் பள்ளிகளின் பெருமையை மேலும் உயர்த்திப் பிடிக்கும் வண்ணம் சிறந்த தேர்ச்சி விகிதங்களைப் பெற செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் நல்வாழ்த்துகளைப் புலப்படுத்திக் கொள்கிறோம்.