மறைந்த அரசியல் தலைவர்கள், சாதனையாளர்கள் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படங்களாவது இந்திய திரையுலகில் தற்போது வழக்கமாகி வரும் வேளையில், மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையையும் படமாக்கும் பணிகள் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
சாகரிகா கோஷ் எழுதிய இந்திரா காந்தி வாழ்க்கை புத்தகத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. இந்திராகாந்தி வேடத்தில் வித்யாபாலன் நடிக்க உள்ளார்.
இப்படியாக வெளிவரும் படங்கள் இரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக இருக்கிறது.
Comments