Home One Line P1 “2020-இல் நான் பிரதமராக பதவி ஏற்பேன்!”- அன்வார்

“2020-இல் நான் பிரதமராக பதவி ஏற்பேன்!”- அன்வார்

1053
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2020-இல் நாட்டின் பிரதமராக பதவியை ஏற்பார் என்று பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

72 வயதான அன்வாரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான உறுதிமொழியுடன் துன் டாக்டர் மகாதீர் முகமட் கடந்த ஆண்டு பிரதமராக பதவி ஏற்றார்.

எந்தவொரு கட்சியும் மற்ற பெயர்களை இப்பதவிக்காக முன்மொழிவதையோ அல்லது ஊக்குவிப்பதையோ அல்லது பரப்புரை செய்வதையோ காண இயலவில்லை” என்று அன்வார் கூறினார்.

#TamilSchoolmychoice

அண்மையில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரத்தில், அன்வார் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. ஆயினும், அதனை தற்போது, கடந்து அரசியலில் தமது அடுத்தக்கட்ட இலக்கை நோக்கி அன்வார் பயணம் செய்து வருகிறார்.

இது தொடர்பாக அன்வாரின் அரசியல் செயலாளர் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

மலாய்க்கார இனங்களின் அச்சங்களையும் கவலைகளையும் அரசாங்கம் சரிசெய்ய வேண்டும் என்று அன்வார் கூறியிருந்தார். அனைத்து இனங்களும் வறுமையிலிருந்து தப்பிக்க உறுதியான நடவடிக்கை மிக முக்கியமானது என்றும் கூறியிருந்தார்.