

சென்னை – 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை செப்டம்பர் 20-ஆம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
தமிழக உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் சிறப்பு விருந்தினராக இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். தமிழகத்தின் தமிழ் ஆட்சிமொழி, பண்பாட்டுத் துறை அமைச்சரான மாஃபா பாண்டியராஜனும் மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
Comments