Home One Line P1 பத்து ஆராங், பினாங்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து கருத்துகள் பகிர்வோர் மீது தீர்க்கமான நடவடிக்கை!

பத்து ஆராங், பினாங்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து கருத்துகள் பகிர்வோர் மீது தீர்க்கமான நடவடிக்கை!

786
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கோலாலம்பூர்: சிலாங்கூர் மற்றும் பினாங்கு ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பொறுப்பற்ற நபர்கள் தொடர்ந்து பரப்பி வரும் கருத்துகள், கட்டுரைகள், நாட்டில் இனரீதியான பதட்டங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுவதால் காவல்துறையினர் அவர்கள் மீது தீர்க்கமான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார்கள் என்று காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்துள்ளார்.

பினாங்கு நகரில் ஒரு நபர் காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் பெண் ஒருவர் வெட்டுக்காயங்களுக்கு ஆளானது தனி வழக்கு என்றும்,  எந்தவொரு குழுவும் அல்லது தனிநபரையும் சம்பந்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், பத்து ஆராங்கில் ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், காணொளிகளைத் ஒளிபரப்புவது பொறுப்பற்ற செயல் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

காவல்துறை எப்போதும் இந்த விசயத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது.  இதனால் பாதிக்கப்பட வேண்டாம். மேலும் கருத்து தெரிவிக்க உங்கள் சொந்த முடிவை எடுக்க வேண்டாம். இந்த கட்டுரையைப் பகிர்ந்துகொண்டு கூடுதல் கருத்துகளைத் தெரிவிக்கும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள். இனி, எச்சரிக்கை எதுவும் இல்லைஎன்று அவர் இன்று புதன்கிழமை புக்கிட் அமானில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.