கோலாலம்பூர்: இவ்வாண்டு வரையிலும் தேசிய உயர் கல்வி நிதிக் கடனைப் (பிடிபிடிஎன்) பெற்றவர்களால், திருப்பிச் செலுத்தப்பட்ட தொகை மட்டும் 1.3 பில்லியன் ரிங்கிட் என்று அதன் தலைவர் வான் சைபுல் வான் ஜான் தெரிவித்தார்.
“இந்த ஆண்டு நாங்கள் 2 பில்லியன் கடன் திருப்பிச் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்று அவர் இன்று புதன்கிழமை மாநில அளவிலான தேசிய கல்வி சேமிப்பு திட்டம் (எஸ்எஸ்பிஎன்) நிகழ்ச்சியைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதுவரையிலும், எஸ்எஸ்பிஎன் கீழ் ஜூலை 31-ஆம் தேதி வரை மொத்தம் 5 பில்லியன் ரிங்கிட் சேமிப்புடன் 4.2 மில்லியன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளதாக சைபுல் கூறினார்.