Home One Line P1 இவ்வாண்டு இறுதிக்குள் ஜோ லோவை மலேசியாவிற்கு கொண்டு வருவோம்!- காவல் துறை

இவ்வாண்டு இறுதிக்குள் ஜோ லோவை மலேசியாவிற்கு கொண்டு வருவோம்!- காவல் துறை

853
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய மலேசிய தொழிலதிபர் ஜோ லோவை இவ்வாண்டு இறுதிக்குள் காவல் துறையினரால் நாட்டிற்கு கொண்டு வர முடியும் என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் நம்புகிறார்.

ஜோலோஇப்போதுஎங்கு எவரின் பாதுகாப்பில் இருக்கிறார் என்பதைகாவல் துறைஅறியும் என்றும்,அவர் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றி சுரந்திரமாக செயல்படுவதும் தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அவர் எங்கிருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். தனது நண்பர்களாக இருக்கும் நான்கு, ஐந்து நபர்களின் இருப்பும் தெரியும்” என்று இன்று  புதன்கிழமைஅவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஜோ லோவை பாதுகாத்து வைத்திருக்கும் தரப்பினரோடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்துல் ஹாமிட் தெரிவித்தார்.

ஜோ லோ, அரசியல் தொடர்பு காரணமாக தேவைப்படவில்லை என்பதை தெளிவுப்படுத்திய ஹாமிட், வணிக ரீதியான குற்றங்களுக்காக அவர் வேண்டப்படுகிறார் என்பதை நினைவுபடுத்தினர்.