பிரான்ஸ்: பெயர் குறிப்பிடப்படாத ஆடவன் ஒருவன் பாரிஸிலுள்ள காவல் துறை தலைமையகத்தில் நான்கு காவல் துறை அதிகாரிகளை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். இந்த சம்பவம் அந்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் அந்த ஆடவர் அக்காவல் துறை தலைமையகத்திலேயே பணிபுருபவர் என்று தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்திற்கான காரணத்தை காவல் துறையினர் கண்டறிந்து வருவதாகவும், கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து பயங்கரவாத தாக்குதல்களினால் பிரான்ஸ் அச்சுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டி வரும் பிரான்ஸ் காவல் துறையினர், தங்களது கோரிக்கைளை வலியுறுத்தி கடந்த புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அடுத்த தினமே இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
இது குறித்த வழக்கு விசாரணை உடனடியாக தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.