Home One Line P1 ஜிஎஸ்டி: மறுக்கமுடியாத சான்றுகள் இருந்தால் மட்டுமே மீண்டும் செயல்படுத்த சாத்தியம்!- குவான் எங்

ஜிஎஸ்டி: மறுக்கமுடியாத சான்றுகள் இருந்தால் மட்டுமே மீண்டும் செயல்படுத்த சாத்தியம்!- குவான் எங்

688
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொருள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மீட்டெடுக்க மக்கள் உண்மையிலேயே விரும்புகிறார்கள் என்பதற்கு மறுக்கமுடியாத சான்றுகள் இருந்தால் மட்டுமே, அதனை மீண்டும் செயல்படுத்த முடியும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

ஏனென்றால், கடந்த 14-வது பொதுத் தேர்தலில் மக்கள் வரி முறையை நிராகரிப்பதாக தெளிவுபடுத்தியுள்ளனர் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

மக்கள் விரும்பினால் ஜிஎஸ்டியை மீண்டும் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராயும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியது குறித்து கருத்து கேட்கப்பட்ட போது லிம் இவ்வாறு கூறினார்.

#TamilSchoolmychoice

பிரதமர் இதனை ஒருபோதும் என்னிடம் குறிப்பிடவில்லை. அவர் ஊடகங்களுக்கு மட்டுமே பதிலளித்தார் என்று நம்புகிறேன். ஆனால் கடந்த பொதுத் தேர்தலில், மக்கள் 6 விழுக்காடு ஜிஎஸ்டியை நிராகரித்திருப்பது தெளிவாகியுள்ளது. மக்கள் விரும்பினால், அவர்களிடமிருந்து ஆணையை நாம் பெற வேண்டும்.” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவில் நடந்த நிதி அமைச்சகத்தின் மாதாந்திர கூட்டத்தின் போது செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.