Home One Line P1 இந்திய மக்களின் மலேசியாவை புறக்கணியுங்கள் பிரச்சாரம் அதுவாக அடங்கிவிடும்!

இந்திய மக்களின் மலேசியாவை புறக்கணியுங்கள் பிரச்சாரம் அதுவாக அடங்கிவிடும்!

1119
0
SHARE
Ad
சைபுடின் அப்துல்லா

கோலாலம்பூர்: அண்மையில் ஐநா சபையில் பேசிய பிரதமர் மகாதீர், ஜம்முகாஷ்மீர் பதற்றம் குறித்து கூறிய கருத்துக்களுக்கு, விஸ்மா புத்ராவுக்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து உத்தியோகபூர்வ எதிர்வினை எதுவும் இதுவரையிலும் கிடைக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மகாதீரின் கருத்துக்கு டுவிட்டரில் தொடர்ந்து #BoycottMalaysia (மலேசியாவை புறக்கணியுங்கள்) எனும் ஹேஷ்டேக் வழியாக இந்தியாவில் மக்கள் தொடங்கிய பிரச்சாரத்தை அமைச்சகம் நெருக்கமாக கண்காணித்து வருவதாக சைபுடின் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக (இந்திய) அரசிடமிருந்து அறிக்கை வந்தால் நாங்கள் பதிலளிக்கத் தயாராக உள்ளோம். ஆனால் இதுவரை இந்திய அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு உத்தியோகபூர்வ எதிர்வினையும் எங்களுக்கு கிடைக்கவில்லைஎன்று அவர் வெளியுறவுக் கொள்கை கட்டமைப்பில் ஊடகங்களுடனான சந்திப்பில் நேற்று வியாழக்கிழமை கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை இந்திய அரசாங்கத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை என்பதால், விஸ்மா புத்ரா இதனை குறுகியக் கால பிரச்சாரமாக கருதுவதாகக் கூறினார். மேலும், ஓரிரு நாட்களுக்குப் பிறகு அதுவாக அடங்கி விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

மகாதீர் தனது உரையில், ஜம்முகாஷ்மீரில் இந்திய அரசாங்கம் படையெடுத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.