கோலாலம்பூர்: தாம் பிரதமர் பதவியினை ஏற்காது இருப்பதற்காக சதித்திட்டங்கள் சாத்தியமானது என தனது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பிய போதிலும், பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தாம் அடுத்த பிரதமராக தொடர்வார் என்ற நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“பிரதமரின் உறுதிமொழியில் நான் திருப்தி அடைகிறேன். அன்வாரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதாக அவர் அளித்த வாக்குறுதியை அவர் மதிக்கிறார் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று அவர் கூறினார்.
டாக்டர் மகாதீர் அவ்வாறு செய்யும் தேதியினைக் குறித்து வினவிய போது, “நாங்கள் பின்னர் தேதி பற்றி விவாதிப்போம்.” என்று அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் பதவி குறித்த தமது முடிவையும், நம்பிக்கைக் கூட்டணியின் ஒருமித்த கருத்தையும், டாக்டர் மகாதீர் மதிப்பதாக அன்வார் தெரிவித்தார்.
“பிரதமர் சொன்னதை நாம் தேர்ந்தெடுத்து விளக்கும் போது அது பிரச்சனையாகிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக, அவர் ஒப்பந்தத்தை மதிப்பதாக தொடர்ந்து கூறி வௌகிறார்” என்று அன்வார் விளக்கினார்.
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக பிகேஆரின் இணை நிறுவனர் சைட் ஹுசின் அலி தனது தனிப்பட்ட கருத்தினை வெளியிட்டுள்ளதாக அன்வார் நேற்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த வாரம், பிரதமர் பதவியை வகிப்பதற்கு தமக்கு மூன்று ஆண்டுகள் மீதமுள்ளதாக மகாதீர் கூறினார். முன்னதாக, அன்வார் அடுத்த ஆண்டு முதல் பிரதமராக இருப்பார் என்று எதிர்பார்ப்பதாக ப்ளூம்பெர்க்கிடம் கூறியிருந்தார்.