Home One Line P2 கோலாலம்பூர் பங்குச் சந்தை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி

கோலாலம்பூர் பங்குச் சந்தை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி

855
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மலேசியப் பங்குச் சந்தை மூடப்பட்டபோது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த புள்ளிகளுடன் வீழ்ச்சி கண்டது.

ஆசிய நாடுகளின் பல முக்கிய சந்தைகளும் மலேசியப் பங்குச் சந்தையைப் போன்றே வீழ்ச்சி கண்டன.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருட்கள் மீது புதிய வரிகளை விதித்ததைத் தொடர்ந்து பங்குச் சந்தைகள் உலக அளவில் வீழ்ச்சி கண்டன.

#TamilSchoolmychoice

கோலாலம்பூர் பங்குச் சந்தை இன்று வெள்ளிக்கிழமை 10.78 புள்ளிகள் இறங்கி, 1,564.12 புள்ளிகளாக நிறைவு கண்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவே ஆகக் குறைந்த புள்ளிகளைக் கொண்ட பங்குச் சந்தை நிலவரமாகும்.

7.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட ஐரோப்பியப் பொருட்களுக்கு புதிய வரிவிதிப்புகளை விதிக்க அமெரிக்கா ஒப்புதல் அளித்திருக்கிறது.

ஏர்பஸ் விமானங்களுக்கு 10 விழுக்காடு வரியும், பிரெஞ்சு வைன், ஸ்காட்லாந்து, அயர்லாந்து நாடுகளின் விஸ்கி,  ஐரோப்பிய நாடுகளின் பாலாடைக் கட்டி (சீஸ்) ஆகியவற்றுக்கு 25 விழுக்காடு வரிவிதிப்பை அமெரிக்கா நிர்ணயித்திருக்கிறது.