Home One Line P2 புட்பாண்டா: பழைய கட்டண முறையே தொடரும், அரசாங்க தலையீடு வேண்டாம்!

புட்பாண்டா: பழைய கட்டண முறையே தொடரும், அரசாங்க தலையீடு வேண்டாம்!

792
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எதிர்ப்புகள் இருந்தபோதிலும் புட்பாண்டா தனது புதிய கட்டண முறையை தொடர முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதன் நிருவாக இயக்குனர் சயந்தன் தாஸ் கூறுகையில், அவர்கள் அரசாங்கத்தின் அக்கறையை வரவேற்பதாகக் கூறினார். ஆயினும், உணவு விநியோக நிறுவனம் அதன் செயல்பாடுகள் மற்றும் பணியாளர்களுக்கு ஒரு நிலையான முடிவை எடுக்க வேண்டும்.

இந்த புதிய நடைமுறையானது நிறுவனம் பெறும் தரவுகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பணியாளர்களின் வருமானத்தை அதிகரிக்க உதவும்என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சந்தை தேவைகளைப் புரிந்துகொள்வதற்கான விவரிப்பு, பார்வைகள் மற்றும் முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் நிறுவனங்கள், அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் செயல்பட வேண்டும்என்று கோலாலம்பூரின் இன்று திங்கட்கிழமை ஊடக சந்திப்பில் அவர் கூறினார்.

கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி, புட்பாண்டா அதன் அசல் கட்டணத் திட்டத்தை தங்கள் பணியாளர்களின் நலனை உறுதிசெய்யும் பொருட்டு மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக்  தெரிவித்திருந்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, நியாயமற்றதாகக் கூறப்படும் புதிய கட்டணத் திட்டத்தை எதிர்த்து சுமார் 200 புட்பாண்டா பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.