Home One Line P1 பினாங்கு: அடுக்குமாடி குடியிருப்பில் 2 கையெறி வெடிகுண்டுகள், 600 தோட்டாக்கள் கண்டெடுப்பு!

பினாங்கு: அடுக்குமாடி குடியிருப்பில் 2 கையெறி வெடிகுண்டுகள், 600 தோட்டாக்கள் கண்டெடுப்பு!

696
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: இங்குள்ள தாமான் சினார் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு ஞாயிற்றுக்கிழமை தீயணைப்பு குழாய் அறையில் இரண்டு வெடி குண்டுகள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட தோட்டாக்களை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

பினாங்கு காவல் துறை தடுப்பு மையத்தின் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வு பிரிவில் உள்ள காவல் துறையினர், போதை மருந்து குழுவுடன் சம்பந்தம் உள்ள ஒருவரை கைது செய்த பின்னர் அவ்வனைத்து கையெறி வெடிகுண்டுகளையும், தோட்டாக்களையும் கண்டுபிடித்தனர்.

போதைப்பொருள் கடத்தல் குழுவின் உறுப்பினராக இருப்பதாக நம்பப்படும் ஒருவர், நேற்றிரவு 7.30 மணியளவில் 15-வது மாடிக்கு கொண்டு செல்லப்பட்ட போது, இன்னும் செயலில் இருக்கும் கையெறி குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

வெடிப்பொருட்கள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்ததற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட நபரிடம் காவல் துறையினர் விசாரித்து வருவதாகத் தெரிவித்தனர். விசாரணைக்கு உதவ அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த சிலரின் வாக்குமூலத்தையும் காவல் துறையினர் பெற்றுக் கொண்டதாகக் கூறினார்.