Home One Line P1 காவல் துறை குறித்த கட்டுரை தொடர்பாக இராமசாமி புக்கிட் அமானில் வாக்குமூலம் அளித்தார்!

காவல் துறை குறித்த கட்டுரை தொடர்பாக இராமசாமி புக்கிட் அமானில் வாக்குமூலம் அளித்தார்!

799
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த மாதம் மலேசியாகெசெட் செய்தித்தளத்தில் தமது கட்டுரைக்கு எதிராக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி இன்று திங்கட்கிழமை புக்கிட் அமான் காவல் நிலையத்தில் தமது வாக்குமூலத்தை அளித்தார்.

கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட ‘புதிய அரசாங்கம் ஆனால் அதே பழைய காவல் படை‘ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை தொடர்பாக புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வர உள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.

மலேசியாகெசெட்டில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில்கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதிரவாங்கில் உள்ள வீட்டுக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று பேரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றது குறித்து இராமசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

#TamilSchoolmychoice

மாறிவரும் சூழ்நிலையில் காவல் துறையினர் இது போன்ற வழக்குகளை கையாள்வதில் புதிய யோசனைகளைக் கொண்டு வர வேண்டும் என்று தனது கட்டுரையில் இராமசாமி கூறினார்.

மேலும்பின் தொடர்வது போன்ற பழைய நடவடிக்கைகள், கொள்ளையர்கள் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் மற்றும் சந்தேக நபர்கள் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இராமசாமி இன்று காலை 9.50 மணியளவில் புக்கிட் அமானுக்கு வந்தடைந்தார்.

முன்னதாக நான் ஒரு செய்தித்தளத்தில் வெளியிட்ட கட்டுரை குறித்த தகவல்களை வழங்க புக்கிட் அமானுக்குச் சென்றேன். எனவே, இந்த விஷயத்தில் நான் காவல் துறையினருடன் நன்கு ஒத்துழைப்பேன். அதை இன்று முடிப்பேன் என்று நம்புகிறேன்என்று கோலாலம்பூரின் புக்கிட் அமானில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறினார்.