Home One Line P1 முடிந்தால் ஜசெக, பெர்சாத்துவை நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேற்றட்டும்!

முடிந்தால் ஜசெக, பெர்சாத்துவை நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேற்றட்டும்!

637
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ரோனி லியு மற்றும் ஜசெகவின் உயர்மட்ட தலைமை, எதிர்வரும் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழு கூட்டத்தில், நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து கட்சியை அகற்றுவதற்கான முன்மொழிவைக் கொண்டுவர ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் முகமட் சைட் ரோஸ்லி சவால் விடுத்துள்ளார்.

ஜசெக மத்திய செயற்குழு உறுப்பினர் துன் டாக்டர் மகாதீர் மீது வெறுப்பைக் கொண்டிருப்பதாக நம்பப்படுவதாகவும், தனிப்பட்ட முறையில் தாக்கும் அறிக்கைகளை வெளியிடுவதில் ஜசெகவின் இனவெறித்தனமான தன்மையை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

ரோனியின் அறிக்கை ஏற்க முடியாதது. இது நம்பிக்கைக் கூட்டணிக்குள் உள்ள கட்சிகளுக்கிடையிலான உறவுகளையும் ஒத்துழைப்பையும் பாதிக்கும்.  டாக்டர் மகாதீரின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வியானது ஒரு காட்டுமிராண்டித்தனமானதாகும். மேலும், பெர்சாத்து கட்சி இல்லாமல் அரசாங்கத்தை உருவாக்க முடியும் என்று கூறும்போது அவரின் திமிர் தனத்தைக் காண முடிகிறது,” என்று அவர் நேற்று செவ்வாயன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஒரு மேலாதிக்க மலாய் கட்சியை உருவாக்கவும், தேசிய முன்னணி மாதிரியான சாயலைக் கொண்ட அரசாங்கத்தை ஏற்படுத்த மகாதீர் நோக்கம் கொண்டுள்ளதகவும் ரோனி கூறியுள்ளார்.

இதற்கிடையில், நம்பிக்கைக் கூட்டணியின் உயர் தலைமையை ரோனி மதிக்கவில்லை என்றால், சிலாங்கூரில் உள்ள நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக சைட் வலியுறுத்தினார்.

இது ஜசெகவுக்கு எதிரான எனது எதிர்ப்பு, நாளுக்கு நாள் மென்மேலும் இனவெறி அதிகரித்து வருவதை நான் பார்க்கிறேன். டாக்டர் மகாதீர் பிரதமராக இருக்க பொருத்தமானவர் என்பதை நிரூபிப்பதற்காகவே இந்த நடவடிக்கை அமையும். இந்நேரத்தில் நாட்டை மீட்டெடுக்க அவரால் மட்டுமே முடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.