Home One Line P2 அஸ்ட்ரோ தங்கத்திரையில் அஞ்சலி நடிப்பில் லிசா திரைப்படம் உட்பட 4 படங்கள்!

அஸ்ட்ரோ தங்கத்திரையில் அஞ்சலி நடிப்பில் லிசா திரைப்படம் உட்பட 4 படங்கள்!

921
0
SHARE
Ad

அஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டியில் அஞ்சலி நடிப்பில் லிசா திரைப்படம் திரையரங்களில் வெளிவந்த கழுகு 2, லிசா, சிக்சர் மற்றும் கனா இந்தவொரு விளம்பர இடைவெளியின்றி செப்டம்பர் மாதம் அஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி (அலைவரிசை 241) –இல் கண்டு மகிழலாம்.

கழுகு 2

நடிகர் கிருஷ்ணா, பிந்து மாதவி, எம்.எஸ்.பாஸ்கர், காளி வெங்கட் நடிப்பில் வெளியாகி இருக்கும் கழுகு 2 திரைப்படத்தைத் தற்போது ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டியில் கண்டு மகிழலாம்

#TamilSchoolmychoice

கடந்த 2012-ஆம் ஆண்டில் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா, பிந்து மாதவிதம்பி ராமையா, கருணாஸ் நடிப்பில் வெளியாகி கழகு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த கழுகு 2 திரைப்படம் தயாரிக்கப்பட்டதுசெந்நாய் உலவும் காட்டை ஏலம் எடுப்பவர் அங்கே வேலைக்கு வரமாட்டார்கள் என்பதால் துப்பாக்கி சுடும் வேட்டையாளை வேலைக்கு வைக்கப்படுகிறார்கள்.

அதற்காக தேனியில் திருட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தும் கிருஷ்ணாவையும் காளி வெங்கட்டையும், போலீஸ் துப்பாக்கியை திருடி ஓடும்போது பார்க்கும் எம் எஸ்.பாஸ்கர் அவர்களை வேட்டையாள் என நினைத்து காட்டுக்கு கூட்டி வருகிறார். அந்த காட்டில் அவர்கள் பிழைத்தார்களா? அங்கே கிருஷ்ணாவுக்கு ஏற்படும் காதல், திருட்டு அவர்கள் வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பதே கதையாகும்.

லிசா

சிறுவயதிலேயே அப்பாவை இழந்த அஞ்சலி தனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க நினைக்கிறாள். ஆனால் மறுப்பு தெரிவிக்கும் அம்மா, காதல் திருமணம் செய்து கொண்டதால், தனது அம்மா, அப்பாவின் தொடர்பு இல்லாமல் போய்விட்டதாகக் கூறுகிறார்.

இதையடுத்து தன்னுடைய தாத்தா பாட்டி வாழ்ந்த வீட்டிற்குச் செல்கிறாள். அங்கு ஒரு வயதான தம்பதி வாழ்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் எதிர்பாராத சில அமானுஷ்யங்களை நடக்க அங்கு கொலை செய்யப்பட்ட அழுகிய உடல்களை கண்டு பதறுகிறார். அந்த வீட்டில் நடந்தது என்ன, பேய் யார், உண்மையில் அவரின் தாத்தா பாட்டி என்ன ஆனார்கள் என்பதே முழுக் கதையாகும்.

இயக்குனர் ராஜு விஸ்வாந்த் இயக்கத்தில் அஞ்சலி, சாம் ஜோன்ஸ், யோகிபாபுபிரேமானந்தா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

சிக்சர்

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின், வாழ்க்கையில் நடக்கும் கலவரங்களைக் கலகலப்பாகக் காட்டும் திரைப்படம் சிக்சர்இப்படத்தில் கதாநாயகனாக வலம் வரும் வைபவ் மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாததால் எங்கு இருந்தாலும் 6 மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவார்.

இந்தக் குறையின் காரணமாகக் காட்டி கல்யாணம் வேண்டாம் என மறுக்கும் வைபவ்கதாநாயகியாக நடிக்கும் பல்லாக் லல்வானி பார்த்ததும் பிடித்துவிடுகிறதுஉண்மையை மறைத்து எப்படிக் கல்யாணம் செய்து கொள்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதையாகும்.

கனா

கெளசல்யா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்இத்திரைப்படத்தில் தன் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட மகளாகவும் , தந்தையை மகிழ்விக்கும் பொருட்டு இந்திய அணிக்காக விளையாடி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என கனவு காண்கிறாள்.

அந்தக் கனவு எத்தனை சவால்களுக்கும்சோதனைகளுக்கும் பின் நிறைவேறியது என்பதே இப்படத்தின் கதையாகும்நடிகர் சிவகார்த்திகேயன், சத்யராஜ், தர்சன் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு திபு நினான் தாமஸ் இசையமைத்துள்ளார்.

அஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி (அலைவரிசை 241) –இல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு புதிய திரைப்படம் ஒளியேறும். இப்பொழுதே இந்த அலைவரிசையை வாங்கி இத்திரைப்படங்களைக் கண்டு மகிழுங்கள்.