Home One Line P1 மலேசிய சூப்பர் பிராண்ட்ஸ்: 28 உள்ளூர் வணிக முத்திரைகள் தேர்வாகி உள்ளன!

மலேசிய சூப்பர் பிராண்ட்ஸ்: 28 உள்ளூர் வணிக முத்திரைகள் தேர்வாகி உள்ளன!

799
0
SHARE
Ad
படம்: நன்றி அவானி

கோலாலம்பூர்: நேற்றிரவு வியாழக்கிழமை தலைநகரில் நடைபெற்ற விழாவில் மொத்தமாக 28 உள்ளூர் வணிக முத்திரைகள் 2019-ஆம் ஆண்டுக்கான மலேசிய சூப்பர் பிராண்ட்ஸ் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன.

இது சந்தையில் சிறந்த மற்றும் மதிப்புமிக்க வணிக முத்திரையை பெருமைப்படுத்தும் நிகழ்ச்சியாகும்.

11-வது முறையாக நடைபெறும் இந்த விருது நிகழ்ச்சியை அனைத்துலக வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சர் டத்தோ டேரல் லீக்கிங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

#TamilSchoolmychoice

சூப்பர் பிராண்ட்ஸ் நிபுணத்துவ குழு தேர்வு மூலம் மொத்தம் 1,468 உள்ளூர் முக்கிய வணிக முத்திரைகள் பங்கெடுத்தன. இதில், சிறந்த வணிக முத்திரையை தேர்ந்தெடுக்க இணையம் மூலம் வாக்களிப்பு நடந்தது.

இது குறித்து பேசிய அமைச்சர், உள்ளூர் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய மற்றும் ஊக்குவிக்க உதவிய அமைப்புகளில் மலேசிய வெளி வணிக மேம்பாட்டுக் கழகம் (மேட்ரேட்) ஒன்றாகும் என்று டேரல் கூறினார்.

உலகெங்கிலும் இந்த அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்பை விற்க பொதுவான காரணத்தைக் கண்டறிய சூப்பர் பிரான்ட்ஸ் மேட்ரேட்டுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன். மலேசியாவிற்கு ஏற்றுமதி முக்கியமானது. மலேசிய தயாரிப்புகள்  ஏற்றுமதி செய்யும் போது, ​​மக்கள் நம் நாட்டை நம்பத் தொடங்குவார்கள். ஆனால்,  நிச்சயமாக, நம் பொருட்கள் உலகம் முழுவதும் போட்டித்தன்மை வாய்ந்தவைஎன்று டேரல் கூறினார்.

இந்த முறை சூப்பர் பிராண்ட்ஸ் விருதைப் பெற்றவர்களில் ஏசர், ஈகோ வேர், வி ஆசியா அழகுசாதனப் பொருட்கள், தாஸ் அப்துல் குளோபல் மற்றும் லிட்டில் கலிஃப்ஸ் இன்டர்நேஷனல் ஆகியவை அடங்கும்.