கோலாலம்பூர்: டாவோஸில் நடைபெற உள்ள உலக பொருளாதார மன்றத்தில், வணிகம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் (எம்ஐடிஐ), டத்தோ டேரல் லெய்கிங், இந்திய இரயில்வே, வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் இடையிலான சந்திப்பு பரபரப்பான அட்டவணையால் சாத்தியப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், டேரல் மற்றும் பியூஷின் சந்திப்பு விருப்பம் இருதரப்பு வணிகம் மற்றும் முதலீட்டு பிரச்சனைகள் பற்றி விவாதிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், கூட்டத்திற்கான அதிகாரப்பூர்வ கோரிக்கையை கடந்த ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி இந்திய இரயில்வே, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அலுவலகம் சமர்ப்பித்ததாக எம்ஐடிஐ தெரிவித்துள்ளது.
“மலேசியா இந்தியாவில் இருந்து விண்ணப்பங்களைப் பெற முயற்சித்து வருகிறது, ஆனால், இரு அமைச்சர்களின் பரபரப்பான அட்டவணை காரணமாக, அதிகாரப்பூர்வ கூட்டத்தை நடத்தாததற்கு ஓர் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.”
“இருப்பினும், ஒரு முறைசாரா சந்திப்புக்கு வாய்ப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து இருதரப்பு நலன்கள் சம்பந்தப்பட்ட விவாதங்கள் நடைபெறும்” என்று எம்ஐடிஐ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளதாக பெர்னாமா குறிப்பிட்டுள்ளது.