Home One Line P1 ஐந்து இடைத்தேர்தல்களில் நம்பிக்கைக் கூட்டணியின் தோல்விக்கு மகாதீர் பொறுப்பேற்க வேண்டும்!- ராம் கர்பால் சிங்

ஐந்து இடைத்தேர்தல்களில் நம்பிக்கைக் கூட்டணியின் தோல்விக்கு மகாதீர் பொறுப்பேற்க வேண்டும்!- ராம் கர்பால் சிங்

880
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த வார இறுதியில் சபாவின் கிமானிஸ் இடைத்தேர்தல் உட்பட ஐந்து இடைத்தேர்தல்களில் நம்பிக்கைக் கூட்டணியின் தோல்விக்கு அரசாங்கத்தின் தலைவராக டாக்டர் மகாதீர் முகமட் பொறுப்பேற்க வேண்டும் என்று புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங் தெரிவித்தார்.

நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு சரிந்து வருவதாகவும், நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமாக மட்டுமே நிலைக்க வாய்ப்பிருப்பதாகவும், அவர் குறிப்பிட்டிருக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார். மேலும், முன்னாள் எதிரிகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருந்ததாகக் கூறி பிரதமர் லிம் கிட் சியாங்கை குறிப்பிட்டது கூட்டணிக்கு நல்லதல்ல என்று அவர் விளக்கினார்.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் உடன் மட்டுமல்லாமல், பிரதமர் யாருடனும் பணியாற்றத் தயாராக இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியிருப்பது, அம்னோகட்சியில் உள்ளவர்களுடனும் பணியாற்ற தயாராக இருப்பது போல இருக்கிறது”

#TamilSchoolmychoice

“61 வருடமாக ஆட்சியிலிருந்து தேசிய முன்னணியை தோற்கடித்த பின்னர், உண்மையான சீர்திருத்தத்திற்கான நம்பிக்கைக் கூட்டணியின் உறுதிப்பாட்டிற்கு இது நிச்சயமாக நம்பகத்தன்மையை அளிக்காதுஎன்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை, பிரதமர் மகாதீர் தாம் பழிவாங்கவில்லை என்று கூறியதுடன், நாட்டின் நன்மைக்காக ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங்குடன் இணைந்து பணியாற்றத் தேர்ந்தெடுத்ததை விவரித்தார்.