Home One Line P2 மலேசியா – சீனா இருவழி வணிகம் 100 பில்லியன் டாலரை 2-வது முறையாக அடையலாம்

மலேசியா – சீனா இருவழி வணிகம் 100 பில்லியன் டாலரை 2-வது முறையாக அடையலாம்

996
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த 2018-ஆம் ஆண்டில் மலேசியா – சீனா இரு நாடுகளுக்கும் இடையிலான இருவழி வணிக உறவின் மூலம் 108.6 பில்லியன் டாலர் வணிகப் பரிமாற்றம் எட்டப்பட்ட நிலையில் 2019-இலும் இந்தச் சாதனை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரு நாடுகளுக்கும் இடையில், இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களிலேயே 889.75 பில்லியன் அமெரிக்க டாலர் வணிகப் பரிமாற்றம் எட்டப்பட்டிருக்கும் நிலையில், ஆண்டு இறுதிக்குள் 100 பில்லியன் டாலரை இந்தத் தொகை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1974-ஆம் ஆண்டில் சீனாவுடன் முதன் முறையாக தூதரகத் தொடர்புகளை மலேசியா ஏற்படுத்திக் கொண்டபோது இருநாடுகளுக்கும் இடையில் இருந்த வணிகப் பரிமாற்றத்தின் மதிப்பு வெறும் 159 மில்லியனாக மட்டுமே இருந்தது.

#TamilSchoolmychoice

ஆனால், கடந்த பத்தாண்டுகளில் மலேசியாவின் மிகப் பெரிய வணிகப் பங்காளியாக சீனா உருவெடுத்திருக்கிறது.

அதேபோல சீனாவிலிருந்து மலேசியாவுக்கு வருகை தரும் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து கடந்த ஆண்டில் 2.94 மில்லியன் சுற்றுப் பயணிகள் சீனாவிலிருந்து வருகை தந்தனர்.

அடுத்த 2020ஆம் ஆண்டு ‘மலேசியாவுக்கு வருகை தரும் ஆண்டு” எனப் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால், அதன் காரணமாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் அதிகப்படியான விளம்பரங்கள் காரணமாக, சுமார் 3 மில்லியன் சுற்றுப் பயணிகள் சீனாவிலிருந்து மலேசியாவுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.