Home One Line P1 5 மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு – 1,200க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களில் தஞ்சம்

5 மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு – 1,200க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களில் தஞ்சம்

840
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தொடர்ந்து பெய்து வரும் அடை மழையைத் தொடர்ந்து நாட்டின் 5 மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுமார் 334 குடும்பங்களைச் சேர்ந்த 1200-க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

நாடு முழுமையிலும் உள்ள 13 தற்காலிக நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், பேராக், ஜோகூர் ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 740 பேர்களை நிவாரண மையங்களில் கொண்டுள்ள சிலாங்கூர்தான் பெருமளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் மலேசிய வானிலை இலாகா விடுத்த அறிக்கை ஒன்றில் கடும் மழை தொடரும் என்றும் இடியுடன் கூடிய புயல்களின் தாக்கமும் பெர்லிஸ், கெடா, பேராக், கிளந்தான், திரெங்கானு, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

செப்டம்பரில் தொடங்கிய மலேசியாவுக்கான பருவமழைக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதத்தின் தொடக்க காலம் வரையில் நீடிக்கும் என்றும் வானிலை இலாகா தெரிவித்துள்ளது.