Home One Line P2 ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை – 67 மணி நேரம் கடந்தும் நீடிக்கும் போராட்டம்

ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை – 67 மணி நேரம் கடந்தும் நீடிக்கும் போராட்டம்

1204
0
SHARE
Ad

திருச்சி – (மலேசிய நேரம் திங்கட்கிழமை பிற்பகல் 3.20 மணி நிலவரம்) தமிழகத்தின் திருச்சி நகருக்கு அருகிலுள்ள நடுக்காப்பட்டி என்ற கிராமத்தில் பயன்படுத்தப்படாமல் கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித் என்ற 2 வயதுக் குழந்தையை மீட்கும் பணிகள் 67 மணி நேரத்தைக் கடந்தும் இன்னும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகின்றன.

சுமார் 88 அடி ஆழத்தில் அந்தக் குழந்தை சிக்கிக் கொண்டுள்ளது.

அந்த ஆழ்துளைக் கிணறு 600 அடிகள் வரை தோண்டப்பட்ட கிணறு என்று கூறப்படுகின்றது. அந்தக் குழந்தை மேலும் கீழே சென்று விடாமல் இருக்க, வெளியில் தெரியும் அந்தக் குழந்தையின் கை ‘ஏர்லோக்’ (Air-lock) முறையில் கம்பிகளைக் கொண்டு இறுக்கிப் பிடிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அக்டோபர் 25-ஆம் தேதி மாலை 5.40 மணி வாக்கில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தொடர்கின்றன. மீட்புப் பணிகளைப் பார்வையிட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வருகை தந்திருக்கிறார்.

குழந்தை விழுந்திருக்கும் குழிக்கு அருகில் மற்றொரு குழியைத் தோண்டி இரு குழிகளுக்கும் இடையில் சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது குழியைத் தோண்டும் போது பாறைகள் குறுக்கிட்டதால் 45 அடிகள் வரையில் மட்டுமே குழிதோண்டப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து ‘போர்வெல்’ எனப்படும் ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டும் சக்தி வாய்ந்த இயந்திரங்களைக் கொண்டு தொடர்ந்து குழிதோண்டப்படுகிறது.

45 அடி வரை தோண்டப்பட்ட குழிக்குள் தீயணைப்புப் படைவீரர் ஒரு இறங்கி நிலைமையைப் பரிசோதித்திருக்கிறார்.

புதிதாகத் தோன்றப்படும் இரண்டாவது குழியிலிருந்து, குழந்தை விழுந்து கிடக்கும் பகுதிக்கு சுரங்கம் அமைத்து, அந்தக் குழந்தையை வெளியே கொண்டு வர 6 தீயணைப்புப் படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

(மேலும் விவரங்கள் தொடரும்)