சென்னை: ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் தமிழகத்தில் குடிக் கொண்டுள்ளதாகவும், அவர்கள் இந்து அமைப்பின் தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில், தமிழகத்தின் கோவை மற்றும் நாகையில் இந்திய தேசியப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.
இதனிடையே, கோவை மற்றும் நாகையில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் சில முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவையில் மொத்தம் இரண்டு இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாத செயலுக்கு திட்டம் தீட்டியது, தாக்குதலுக்கு தேவைப்படும் நிதியை திரட்டுவது போன்றவை கோவையில் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
இதன் மூலம் இந்தியாவின் பல இடங்களில் தாக்குதல்களை நடத்தி இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வர சிலர் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.