Home One Line P1 “ஜோ லோ இன்னும் அமெரிக்காவின் வேண்டப்படும் நபர் பட்டியலில் உள்ளார்!”- அமெரிக்கா

“ஜோ லோ இன்னும் அமெரிக்காவின் வேண்டப்படும் நபர் பட்டியலில் உள்ளார்!”- அமெரிக்கா

771
0
SHARE
Ad

வாஷிங்டன்: சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ, அமெரிக்க நீதித்துறையுடன் ஓர் உடன்பாட்டை எட்டிய போதிலும் அவர் இன்னும் அமெரிக்காவில் வேண்டப்படும் நபர் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு ஆசிய மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளர் டேவிட் ஆர். ஸ்டில்வெல் கூறுகையில், ஜோ லோவுக்கு எதிரான விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜோ லோவால் கையகப்படுத்தப்பட்ட 3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களுக்கு எதிரான பறிமுதல் வழக்கின் தீர்வை அறிவித்த போதிலும், இது எந்தவொரு குற்றவியல் தவறுகளிலிருந்தும் ஜோ லோவை விடுவிக்கவில்லை என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நாங்கள் இன்னும் நீதியைப் பின்தொடர்கிறோம். குற்றவியல் நடவடிக்கை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, ”என்று நேற்று வெள்ளிக்கிழமை அவர் கூறினார்.

1எம்டிபியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலரை (4.18 பில்லியன் ரிங்கிட்)  திரும்பப் பெறுவதற்காக அமெரிக்க நீதித்துறை ஜோ லோவுடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக கடந்த வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க ஊழல் எதிர்ப்பு ஒடுக்குமுறையில் இது மிகப்பெரிய மீட்பாகக் கருதப்படுகிறது.

திருடப்பட்ட பணத்திற்கு அமெரிக்கா ஒரு பாதுகாப்பான புகலிடமாக மாறுவதைத் தடுக்க கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அமைக்கப்பட்டதிலிருந்து இது அமெரிக்க நீதித்துறையின் முயற்சிக்கு கிடைத்த மிக முக்கியமான வெற்றியாக விவரிக்கப்பட்டது.

இதற்கு கருத்துரைத்த பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், ஜோ லோவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலரை திருப்பித் தருமாறு அமெரிக்காவிடம் மலேசியா கேட்கும் என்று கூறியிருந்தார்.