Home One Line P2 மலேசியா ஏர்லைன்ஸ்: பயண சீட்டுகளுக்கு 30 முதல் 35 விழுக்காடு தள்ளுபடி!

மலேசியா ஏர்லைன்ஸ்: பயண சீட்டுகளுக்கு 30 முதல் 35 விழுக்காடு தள்ளுபடி!

859
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நவம்பர் 5 முதல் 18 வரையிலான அனைத்து இடங்களுக்குமான சிக்கன வகுப்பு கட்டணத்தில் 30 விழுக்காடு வரையிலும், சொகுசு வகுப்புக்கு 35 விழுக்காடு வரையிலுமான தள்ளுபடியை மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் அறிவித்துள்ளது.

2019-ஆம் ஆண்டு நவம்பர் 5 முதல் 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 30 வரையிலான விமான பயணங்களுக்கு இந்த தள்ளுபடிகள் செல்லுபடியாகும் என்று நேற்று திங்களன்று ஓர் அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

சிக்கன வகுப்பு வாடிக்கையாளர்கள் பாலிக்கு செல்ல 661 ரிங்கிட் முதலும், சியோலுக்கு 1,299 ரிங்கிட், தோக்கியோவிற்கு 1,569 ரிங்கிட்,  சிட்னிக்கு 1,699 ரிங்கிட்,மற்றும் இலண்டனுக்கு 2,999 ரிங்கிட் முதல் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், ஒரு வழி பயணம் சொகுசு வகுப்பு பயணத்தை மேற்கொள்பவர்களுக்கு, பினாங்குக்கு 89 ரிங்கிட்டும், கூச்சிங்கிற்கு 129 ரிங்கிட்டும்,  மேலும் கோத்தா கினபாலுக்கான கட்டணம் 179 ரிங்கிட்டாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.