Home One Line P2 திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையை அணிந்து வழிபட்டதற்கு அர்ஜூன் சம்பத் கைது!

திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையை அணிந்து வழிபட்டதற்கு அர்ஜூன் சம்பத் கைது!

770
0
SHARE
Ad

தஞ்சாவூர்: அண்மையில் தஞ்சாவூரில் உள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு பின்பு நிலமை சரிசெய்யப்பட்டது.

இதற்கிடையே, திருவள்ளுவருக்கு காவி நிறத்திலான உடையை அணிந்து படம் வெளியிடப்பட்டதன் பிறகு ஏற்பட்ட கருத்து மோதல்களுக்குப் பிறகுதான் இவ்வாறு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நிலமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலையில், திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் காவி உடை போர்த்தியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும், அச்சிலைக்கு ருத்ராட்ச மாலையை அணிவித்து, நெற்றியில் திருநீறு பூசி, கற்பூரம் ஏற்றி வழிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

பிள்ளையார்பட்டியில் உள்ள இந்த சிலைக்கு முக்கிய விஷேச தினங்களில் போது மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருவள்ளுவர் சிலையின் கண்களில் கறுப்புத் துணியைக் கட்டி, முகத்தில் சாணம் அடித்துவிட்டுச் சென்றது அவர்களுக்கு பெரும் மன உழைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறினர்.

நிலைமையை சரி செய்ய, காவல் துறையினர் தனிப்படை அமைத்து இச்செயலைச் செய்த மர்ம நபர்களைத் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், தனது ஆதரவாளர்களுடன் பிள்ளையார்பட்டிக்குச் சென்ற அர்ஜூன் சம்பத், அங்கிருந்த திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடையைப் போர்த்தி, ருத்ராட்ச மாலையை அணிவித்து சிலையின் நெற்றியில் திருநீறு பூசியுள்ளார். இதைத் தொடர்ந்து கற்பூரம் ஏற்றி தீபத்தைக் காட்டிவிட்டு, திருவள்ளுவரை வணங்கியுள்ளார்.

இதனையடுத்து, உடையாளூரில் உள்ள இராஜராஜ சோழன் சமாதிக்கு மரியாதை செய்துவிட்டு வந்த அர்ஜுன் சம்பத்தைப் காவல் துறையினர் கைது செய்தனர்.