Home One Line P2 அடையாளம் தெரியாத நபர்களால் திருவள்ளுவர் சிலைக்கு சேதம்!

அடையாளம் தெரியாத நபர்களால் திருவள்ளுவர் சிலைக்கு சேதம்!

1589
0
SHARE
Ad

தஞ்சாவூர்: அடையாளம் தெரியாத நபர்கள் திருவள்ளுவர் சிலையின் முகம் மற்றும் கன்னங்களில் சாணத்தைத் தெறித்துள்ளார்கள். நேற்று திங்கட்கிழமை காலையில் அதைக் கவனித்த உள்ளூர்வாசிகள் அதிர்ச்சியடைந்து போராட்டத்தில் இறங்கினர்.

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் அசுத்தமாக்கப்பட்ட நிலையில் அச்சிலை காணப்பட்டது. திருவள்ளுவரின் கண்கள் கருப்பு காகிதத்தை வைத்து கட்டப்பட்டும் இருந்தது.

அடையாளம் தெரியாத நபர்கள் சிலையின் முகம் மற்றும் கன்னங்களில் சாணத்தைத் தெறித்திதுள்ளனர். காலையில் அதைக் கவனித்த உள்ளூர்வாசிகள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து, அவை அகற்றப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

சிமிட்டியால் செய்யப்பட்ட இச்சிலை வள்ளுவர் குல சங்கத்தால் கடந்த 2005-ஆம் ஆண்டு பிள்ளையார்பட்டியில் நிறுவப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.