Home One Line P1 “கோல்ட்மேன் சாச்ஸ் வழங்கும் இழப்பீடு மிகக் குறைவானது!”- மகாதீர்

“கோல்ட்மேன் சாச்ஸ் வழங்கும் இழப்பீடு மிகக் குறைவானது!”- மகாதீர்

694
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் தொடர்பாக கோல்ட்மேன் சாச்ஸிடமிருந்து இழப்பீடு பெறுவதை மலேசியா நிராகரித்துள்ளது, ஏனெனில் அந்நிறுவனம் தர ஒப்புக்கொண்ட தொகையானது மிகக் குறைவாக இருப்பதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

7.5 பில்லியன் அமெரிக்க டாலர் (31.16 பில்லியன் ரிங்கிட்) அரசாங்கத்தால் ஏற்பட்ட இழப்புகளுடன் ஒப்பிடும்போது, ​​நியூயார்க்கை தளமாகக் கொண்ட முதலீட்டு வங்கி வழங்கும் இந்த இழப்பீடு போதுமானதாக இல்லை என்று பிரதமர் கூறினார்.

அவர்கள் மொத்த இழப்புகளையும் செலுத்த முடியாமல் போகலாம், ஆனால் அவர்கள் வழங்குவதாகக் கூறியது மிகக் குறைவு. எனவே, அவர்களின் இழப்பீட்டை நாங்கள் நிராகரித்தோம். எந்தவொரு உடன்படிக்கைக்கும் வர முடியாவிட்டால், இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோம்.

#TamilSchoolmychoice

நீதிமன்றத்தில் நீண்ட காலம் எடுத்தாலும், நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம். நீதிமன்றத்தின் தீர்ப்பையும் சட்ட அமைப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்வதே இதற்குக் காரணம்என்று நேற்று திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

கோல்ட்மேன் சாச்ஸின் இழப்பீட்டை மலேசியா நிராகரித்ததாக பைனான்சியல் டைம்ஸ் அறிக்கை முன்பு கூறியிருந்தது. 1எம்டிபியின் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் பத்திரங்களை வாங்க கோல்ட்மேன் சாச்ஸ் வங்கி உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திர வெளியீட்டில் வங்கியின் ஈடுபாட்டை உறுதி செய்வதற்காக இரண்டு முன்னாள் கோல்ட்மேன் ஊழியர்கள் இலஞ்சம் வழங்கியதாக மலேசியா கூறியதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. கோல்ட்மேன் 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்ததாகக் கூறப்பட்டது.

1எம்டிபியின் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர் பத்திரங்களை நிர்வகிப்பது தொடர்பாக மூன்று கோல்ட்மேன் துணை நிறுவனங்கள் மீது மலேசியா குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

அமெரிக்க நிதி சூழலில் முக்கிய பங்கு வகிக்கும் வங்கிக்கு எதிராக, ஒரு நாடு குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதற்கிடையில், கோல்ட்மேனிடமிருந்து மலேசியா பெற இருக்கும் தொகையை டாக்டர் மகாதீர் குறிப்பிடவில்லை