ஹரித்துவார் – இங்கு நிறுவப்பட்ட பின்னர் சில எதிர்ப்புகளின் காரணமாக அகற்றப்பட்ட திருவள்ளுவர் சிலை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் – போராட்டங்கள் காரணமாக, நேற்று மீண்டும் வெற்றிகரமாக நிறுவப்பட்டது.
“நேற்று குருபூர்ணிமா எனப்படும் முழு பௌர்ணமியான நன்னாளில், திருவள்ளுவரின் நல்லாசி கிடைத்திருக்கின்றது. உத்தரகாண்ட் மாநில அரசாங்கம் தனது தவறைத் திருத்திக் கொண்டது. மீண்டும் நிறுவப்பட்ட சிலைக்கு மாலை அணிவித்தேன்” எனப் பெருமையுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், தருண் விஜய்.
திருவள்ளுவர் சிலை மீண்டும் நிறுவப்பட பல தரப்புகளில் இருந்தும், தமிழர்கள் அமைப்புகள், தனிநபர்கள் ஆகியோரிடமிருந்தும் முழுமையான ஆதரவு கிடைத்து வந்தது. சிலை மறுக்கப்பட்டதற்கு பலர் கண்டனங்களும் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தருண் விஜய்க்கு உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
திருவள்ளுவர் சிலை மீண்டும் ஹரித்துவாரில் நிறுவப்படதொடர்ந்து வழங்கி வந்த ஆதரவுக்கும், பொறுமையோடும் அதே வேளையில் விடாப்பிடியோடும் போராடியதற்காகவும் தமிழர் சமுதாயத்திற்கு தருண் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
ஹரித்துவாரில் மீண்டும் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை…