Home Featured நாடு தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார் சஞ்சீவன்!

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார் சஞ்சீவன்!

1228
0
SHARE
Ad

Sanjeevanசிரம்பான் – சட்டவிரோதமாக வெளிநாட்டுத் தொழிலாளரை நியமித்தது மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் ‘மைவாட்ச்’ தலைவர் டத்தோ ஆர்.ஸ்ரீசஞ்சீவன்.

நேற்று அமர்வு நீதிமன்றத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. கடந்த ஜூன் 22-ம் தேதி, நீலாய் சுங்கச் சாவடி அருகே இரவு 10.45 மணியளவில் எம்.மணிவண்ணன் என்ற வெளிநாட்டுத் தொழிலாளரை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தியதாக அவர் மீது முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 

குடிநுழைவுச் சட்டம் 1959/63, சட்டப்பிரிவு 55பி(1)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டு விதிக்கப்படலாம்.

#TamilSchoolmychoice